பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

67


7. போட்டிகளில சமநிலை ஏற்படும்பொழுது
(TIES)
(விதி : 146)

கீழ்க்காணும் முறைகளில், போட்டிகளில் சமநிலை ஏற்பட்டால், தீர்வு காணலாம்.

ஓடும் போட்டிகள் : 1. தேர்வோட்டப்போட்டிகள் (Heat) எதுவாக இருந்தாலும் சரி, ஒட்டக்காரர்கள் சமநிலையில் ஓடி முடித்திருந்தால், அந்த முடிவானது, அடுத்தத் தேள்வோட்டப் போட்டிக்கு (Next Round) அல்லது இறுதி ஓட்டத்திற்கு அவர்கள் கலந்து கொள்ளத் தடையாக இருக்குமானால், சமநிலையாக ஓடியவர்களை அடுத்தப்போட்டிக்கு சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இல்லையென்றால், மீண்டும் அவர்களை ஒடிப் போட்டியிடச்செய்து, தேர்ந்தெடுக்கவேண்டும்.

எந்த இறுதி ஒட்டப் போட்டியிலாவது (Any final) முதல் இடத்திற்கு சமநிலை ஏற்பட்டால், தலைமை நடுவருக்கு கீழ்காணும் முறையில் முடிவு செய்ய முழு அதிகாரம் உண்டு. அதாவது, சமநிலை வாய்ப்பினைப் பெற்றவர்களை மீண்டும் ஓடச் செய்து, முடிவினைத் தேர்வு செய்ய, நடைமுறையில் சாத்தியமாக இருந்தால், அவர்களை மீண்டும் ஓடிப்போட்டியிடச் செய்யலாம்.