பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

69


இதற்கான விளக்கம் (மறுபக்கம் உதாரணம் காண்க)

ABCD ஆகிய நால்வரும் 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டி முடித்து, 194 மீட்டள் உயரத்தில் தாண்ட இயலாமற் போனாள்கள்.

இப்பொழுது தான் மேலே குறிப்பிட்டு உள்ள விதிமுறைகளைக் கையாண்டு சமநிலையைத் தீர்க்க முயல்வோம்.

D என்பவர் 1.92 மீட்டர் உயரத்தைத் தனது இரண்டாவது முயற்சியில் தாண்டி முடித்தாள். மற்ற மூவரும், தங்களது 3வது முயற்சியில் தான் வெற்றி பெற்றார்கள்.

ஆகவே, ABC மூவரும், இப்பொழுது சமநிலை வாய்ப்பில் உள்ளனர், நடுவர்கள், இப்பொழுது, அவர்கள் மேற்கொண்ட தோல்விகளில், குறைந்த எண்ணிக்கையில் யார் இருக்கிறாள் என்பதைக் கண்டறியும் பொழுது, அவர்கள் 1.92 மீட்டர் உயரத்தில் தாண்டிய வாய்ப்பைக் கணக்கிடுகின்றார்கள்.

C என் பவர் A,B இருவரை விட அதிக எண்ணிக்கையில் தோல்வியடைந்திருப்பதால், அவருக்கு 4வது இடம் அளிக்கப்பட்டது.

A B என்பவர்கள், மீண்டும் சமநிலையில் இருக்கிறார்கள். இது முதலாவது இடத்திற்கான சமநிலை. இல்லையென்பதால், இருவருக்குமே 2வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.