பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

71


இ) மீண்டும் அதாவது இன்னும் சமநிலை தொடர்ந்தால் :

1) இது முதலாவது இடத்திற்கான சமநிலை என்றால், சமநிலையில் உள்ள போட்டியாளர்களை, தோற்ற உயரத்திலிருந்து குறைந்த அளவு உயரமாகக் குறுக்குக் தம்பத்தை இறக்கி வைத்து, அதைத் தாண்டுமாறு கூறவேண்டும்.

இதிலும் எல்லாரும் தோற்று அல்லது தாண்டி சமநிலை தொடர்ந்தால், மீண்டும், உயரத்தைக் குறைத்தோ அல்லது அதிகமாக்கியோ சமநிலையில் உள்ளவர்களைத் தாண்டச் செய்ய வேண்டும்.

அவ்வாறு உயரத்தை ஏற்றுவது அல்லது இறக்குவது எவ்வளவு உயரம் என்பதைத் தலைமை நடுவர் அறிவித்திட வேண்டும்.

ஒவ்வொரு முறை வைக்கின்ற உயரத்தைத் தாண்ட, ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாய்ப்பு தான் உண்டு. இறுதி முடிவு தெரியும் வரை, இப்படியே செய்தாக வேண்டும்.

சமநிலையைத் தீர்க்க இவ்வாறு மேற்கொள்ளும் முயற்சியில், போட்டியிடுகின்றவர்கள், ஒவ்வொரு முறையும் கட்டாயம் தாண்டியே ஆக வேண்டும்.

2) முதலாவது இடத்தைத் தவிர, மற்ற 2,3,4 ம் இடங்கள் என்றால், அவர்கள் போட்டியில் எந்த வெற்றி இடத்தில் (Place) இருந்தார்களோ, அந்த இடமே வழங்கப்படவேண்டும்.