பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

75


அறிவிக்கப்படுகிறது என்பதற்குரிய சரியான, நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

3. ஏதாவது பிரச்சினை இருந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட போட்டியாளரே, வாய்மொழி மூலமாக, தனது எதிர்ப்பினை தலைமை நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். அல்லது அவர் சார்பாக வேறு ஒருவர் இது பற்றி நடுவரிடம் தெரிவிக்கலாம்.

பிரச்சினையைத் தெளிவாகத் தீர்த்து, சரியான ஒரு முடிவுக்கு வருவதற்காக, தலைமை நடுவர் என்னென்ன சான் றுகள் தேவையென்று கருதுகிறாரோ, அவற்றையெல்லாம் போட்டி நடத்துபவர்களிடமிருந்து பெற்று, தனது எதிர்ப்பை அளிக்கலாம். சான்றுகள் என்பது புகைப்படம், அல்லது வீடியோவில் பதிவு செய்த படம் அல்லது சினிமாவாக எடுத்த படம் என்று எது தெளிவாக இருந்தாலும், பார்த்துப் பொருத்தமான முடிவினைக் கூறலாம்.

தலைமை நடுவர் (Referee) அந்த எதிர்ப்புக்குரிய பதிலாக, தானே முடிவெடுக்கலாம், அல்லது நீதிக் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம். தலைமை நடுவர் முடிவொன்றை எடுத்திருந்தாலும் கூட, மீண்டும் நீதிக்குழுவிற்கு மனு செய்து கொள்ள எதிர்ப்பு மனு அளித்தவருக்கு வாய்ப்புண்டு.

4. நீதிக்குழுவிற்கு எதிர்ப்பு மனுவை சமர்ப்பிக்கும் போட்டியாளர், எழுத்து மூலம் தரவேண்டும். அந்த மனுவில்