பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

79


5. உலக சாதனைகளை ஏற்படுத்துகிற நேரத்தில், கீழ்க்காணும் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

(அ) போட்டிகளானது திறந்த வெளி மைதானத்தில் நடைபெறுவதாக (Out of doors) இருக்க வேண்டும். ஒடுகளப் பாதைகள் மரப்பலகைகள் பதித்தனவாக அமைந்திருக்கக் கூடாது.

(ஆ) அதிகாரப பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டப் போட்டியாக அந்தப் போட்டி அமைந்திருக்க வேண்டும். அதாவது அந்த நாட்டின் தலைமைக் கழக உறுப்பினரால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அவரது மேற்பார்வையில், தேதி, இடம் முதலியன அறிவிக்கப்பட்டு, சரியான முறையில் விவரங்கள் வெளியிடப்பட்டு, விளம்பரப் படுத்தப்பட்டு, சரியான முறையில் நடைபெறுகிற போட்டியாக அது அமைந்திருக்க வேண்டும்.

போட்டிகளில் பங்குபெறுகிற போட்டியாளர்களின் பெயர்கள், அச்சிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்ததாக வேண்டும்.

(இ) ஒரு போட்டி நிகழ்ச்சியில் (Event) ஏற்படுத்தப் படுகிற சாதனையானது, அந்தப் போட்டி நிகழ்ச்சியில் ஏற்கனவே ஏற்படுத்தப் பட்டிருக்கும் சாதனைக்கு இணையாகவாவது (equal) அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலாவது இருந்தாக வேண்டும். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட சாதனையை (Latest Record) அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.