பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


(ஈ) தேர்வோட்டப் போட்டிகளில் (Heats) அல்லது பங்கு பெறத் தகுதி பெற நடத்தும் போட்டிகளில்; அல்லது சமநிலை தீர்க்க மேற்கொள்ளும் போட்டிகளில் (Ties) அல்லது ஹெப் டாதலேன் மற்றும் டெக் காதலான் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் ஏற்படுத்துகிற சாதனையை, தலைமைக் கழகம் சரிபார்த்து முடிவு கூறுவதற்காக (Ratification) அனுப்பி வைக்க வேண்டும்.

6. பெண்கள் ஏற்படுத்தும் சாதனைகள் என்றால், அந்த வீராங்கனையின் பெயர் அகில உலக அமெச்சூள் கழகம் வைத் தளிருக் களின் ற வீராங் கனைகளின் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், அந்தப் பெண்ணின் பெயர்,அவர் நிகழ்த்திய சாதனைக் குறிப்புடன், அந்தப் பெண் சார்ந்திருக்கின்ற நாட்டின் தேசியக் கழகம் அமைந்திருக்கின்ற மருத்துவக் குழு பரிசோதித்து, அவள் பெண் தான் என்று அளித்திருக்கும் சான்றிதழையும் (Certificate) இணைத்து அனுப்பிட வேண்டும்.

ஆண் பெண் கலந்து கொண்டு போட்டியிடுகிற ஒரு போட்டி நிகழ்ச்சியில் (Mixed Competition) ஏற்படுத்துகிற சாதனையானது எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

7. (அ) ஒட்டப் போட்டிகளில் அல்லது நடைப் போட்டிகளில், ஏற்படுத்துகிற சாதனைகள் யாவும், கரை அமைக்கப்பட்ட பாதைகளில் (Banked Track