பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

81


நடத்தப்பட்டால் தான் , அங் கரீகரிக் கப் படும் . கரையமைக்கப்படாத சாலைகளில் நடத்தப் பெறும் போட்டிகளின் சாதனைகள் எதுவும் அங்கீகாரம் பெற முடியாமற் போய்விடும்.

அந்தப்பாதைகள் (Tack) பசும்புல் தரையாக இருந்தால், அவற்றில் எல்லைகள் குறிக்கப்பட்டு, கொடிகள் நடப்பட்டு, 161வது விதியின்படி இருந்தால் தான், சாதனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

(ஆ) ஒரு ஒட்டப் போட்டி என்பது ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒடி முடிப்பது என்பதாகும். அந்தக் குறிப்பிட்ட தூரத்தை ஒடி முடிக்க பங்கு பெறும் போட்டியாளர்கள் அனைவரும், அந்தப் ஒட்டப் போட்டியை ஒடி முடித்திருக்க வேண்டும்.

அந்தக் குறிப்பிட்டப் போட்டியில் பங்கு பெறுகிற ஓர் ஒட்டக்காரர், தான் முழு ஓட்டத் தூரத்தையும் ஓடி முடிக்க விருப்பம் இல்லாமல்; ஆனால் அதே சமயத்தில் இன்னொரு ஒட்டக்காரருக்கு உதவுகின்ற வகையில் ஒடிக்கொண்டிருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தலைமை நடுவர் கருதினால், அந்த ஓட்டம் சரியான போட்டி அல்ல என்பதை அறிவித்து விட்டு, அந்த ஓட்டப் போட்டியில் ஏற்படுத்துகிற சாதனையையும் முறையற்றது என்று தள்ளி விட்டு ஒட்டப் போட்டியே தகுதியற்றது என்றும் ஒதுக்கிவிடலாம்.