பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


அதாவது, ஒரு ஒட்டமானது, அதன் தூரத்தையும், அதை ஒடி முடிக்கின்ற நேரத்தையும் இணைத்தே கணிக்கப்படுகிறது. அதை எப்படிக் கண்காணிக்கின்றாள்கள் என்பதை 162 வது விதியில் 13 வது பகுதியைக் காணவும்.

ஒரு ஒட்டக்காரர், ஒரே ஒட்டப்போட்டியில் எத்தனை முறையேனும் சாதனைகளை ஏற்படுத்தலாம். அது போலவே, பல ஒட்டக்காரர்கள் ஒரே ஒட்டப் போட்டியில் பல சாதனைகளை ஏற்படுத்த அனுமதி உண்டு. ஒரு ஒட்டக்காரர் தான் மேற்கொண்டு பங்கு பெறுகிற ஒரு ஒட்டப் போட்டியில், ஏற்படுத்தப் பட்டிருக்கிற முழு தூரத்தையும் ஓடி முடிக்காமல், செய்கிற சாதனையானது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

(இ) ஒட்டப் போட்டிகள், நடைப் போட்டிகள் அனைத்திலும் 119 வது விதியில் கூறப்பட்டுள்ளபடிதான் நேரம் குறிக்கப்படல் வேண்டும். அதிகார பூர்வமுள்ள நேரக் குறிப்பாளர்கள் என்றால், அவர்களை போட்டி நடைபெறுகின்ற நாட்டின் தேசியக் கழகம் அனுமதித்திருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட முழுதுமாக தானாக இயங்குகிற (Automatic) எலக்ட்ரானிக் கடிகாரங்களாக இருக்க வேண்டும். (விதி 120).

400 மீட்டர் தூரம் உட்பட, இதற்கு உட்பட்ட ஒட்டப் போட்டிகள் அனைத்தும், தானியங்கி எலகட்ரானிக் கடிகாரங்களால் நேரம் அளக்கப்படுவது தான் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படும்.