பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


(ஊ) 200 மீட்டரும், அதற்கு உட்பட்ட தூரமும் உள்ள ஒட்டப் போட்டிகளில், ஏற்படுத்தப்படுகிற சாதனையானது, அந்தப் போட்டியின் போது அடிக்கிற காற்று வேகத்தையும் கணித்த பிறகே உறுதி செய்யப்படுகிறது. (விதி 149 ஐக் காண்க)

ஒட்டக்காரர்கள் முடிவெல்லையை நோக்கி ஓடும் திசைப் பக்கமாக; ஒரு நொடிக்கு 2 மீட்டர் தூரம் உதவுவதாகக் காற்று அடிக்குமானால், அந்த சூழ்நிலையில் ஏற்படுகிற சாதனையானது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

(எ) ஓடும் பாதைகளில் (Lanes) ஒடப்படுகிற ஒட்டப் போட்டியில், அந்தப் பாதையின் உட்புறமாய் அமைந்த வளைவுப் பகுதியின் உட்புற எல்லைக்குள்ளே (Cuved Border) ஓடியவர்கள் உண்டாக்கும் சாதனை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

(ஏ) தொடரோட்டப் போட்டியில் சாதனை நிகழ்கிறது என்றால், அந்தப் போட்டியில் பங்கு கொண்ட குழுவினர் அனைவரும் ஒரே நாட்டினராக இருத்தல் வேண்டும். வேறு நாட்டினள் ஒருவர், இன்னொரு நாட்டின் உடலாளராகப் பங்கு கொள்கிற போது, அவர் விதி முறைப்படி அந்த உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.

தலைமைக் கழகத்தின் தனிப்பட்ட உறுப்பினர் அந்தஸ்து இல்லாத காலணியைச் (colony) சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அந்தக்