பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

85


காலனி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களது தாய் நாட்டின் அங்கமாகவே திகழ்கிறார்கள்.

(ஐ) தொடரோட்டத்தில் பங்கு பெறும் நான்கு ஒட்டக்காரர்களில், முதலாவது ஒட்டக்காரர் ஓடி முடிக்கும் நேரத்தை, சாதனை நேரம் என்று சமர்ப்பிக்கக்கூடாது.

8. நடைப் போட்டிகளுக்குரிய ஒட்டப்பாதையின் அமைப்பானது கீழ்க்கண்ட முறையில் அமைந்திருந்தால் தான், அதில் ஏற்படுத்தப்படுகிற சாதனை ஏற்றுக் கொள்ளப்படும்.

அந்த ஓடுகளம் (Track) ஓவல் வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும். அதாவது குறைந்த பட்சம் 350 மீட்டரிலிருந்து 500 மீட்டர் அதிக பட்சம் அளவு கொண்ட 2 வளைவுகளும், குறைந்த அளவு 60 மீட்டரிலிருந்து அதிக அளவு 120 மீட்டர் உள்ள 2 நீளங்கள் (Straights) உடைய ஓவல் ஓடுகளமாக அது அமைந்திருக்க வேண்டும்.

9. (அ) கள நிகழ்ச்சிகள் என்றால் அங்கீகரிக்கப்பட்ட சென்டிமீட்டர் அளவு குறித்துள்ள ஸ்டீல் டேப்புடன் (தகட்டளவை) 3 கள நடுவர்கள் அளந்து, தூரத்தை அல்லது உயரத்தைக் குறித்திருக்க வேண்டும். அல்லது போட்டிகளை நடத்தும் நாட்டின் அரசு எடைகள் மற்றும் அளவுகள் கண்காணிக்கும் துறையினர் அங்கீகரித்துள்ள அறிவியல் கருவிகளின் துணை கொண்டு அளந்திருக்க வேண்டும்.