பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

87


10. ஹெப்டாதலென், டெக்காதலான் போன்ற போட்டிகளில் சாதனை ஏற்படுகிறபொழுது, தனிப்பட்டவர்கள் பங்கு கொள்ளும் போட்டிகளுக்கு விதித்திருக்கிற விதிமுறைகள், இவற்றிற்கும் பொருந்தும்.

ஆனால், காற்றடிக்கும் வேகத்தின் அளவு ஒரு நொடிக்கு 4 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாகாமல் இருந்தால், (காற் றரின் அளவு பார்த்து அந்த சாதனை ஏற்றுக்கொள்ளப்படும்.

11. அகில உலக அமெச்சூர் கழகத்தின் தலைவரும், பொதுச்செயலரும் சேர்ந்து, உலக சாதனையை அங்கரீகரித்திட அதிகாரம் பெற்றவர்களாக விளங்குகின்றார்கள்.

உலக சாதனையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதில் அவர்களுக்குள் ஐயம் ஏற்படுகிற பொழுது. அதை குழுவின் (Council) தீர்ப்புக்கு விட்டு, முடிவெடுக்கப்படும்.

அதன் பிறகு, அகில உலக அமெச்சூள் கழகம், விண்ணப்பித்திருந்த உறுப்பினருக்கும் நாட்டின் தேசிய கழகத்திற்கும், சாதனை ஏற்றுக்கொண்டது பற்றிய விவரம் தெரிவிக்கும். அவ்வாறு அந்த சாதனையை ஏற்றுக் கெ ாள் ளவில் லை என்று அறிவித் தால் , ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. என்ற காரணத்தையும் கழகம் தெரிவிக்கும்.

12. அகில உலக அமெச்சூள் கழகத்தின் செய்தி ஸ்தாபனம் (Bureau) உலக சாதனைகளின் பட்டியலையும், ஒலிம்பிக் சாதனைகளின் பட்டியலையும் சேகரித்துக் காத்து