பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



88

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


வைத்திருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை, இந்தப் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டு, அந்தப் புதிய பட்டியலடங்கிய பிரததிகள், அகவில உலக அமெச் சூர் கழக உறுப்பினர்களுக்கெல்லாம் அளிக்கப்படும்.

13. அ.உ.அ. கழக உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் தேசிய சாதனைகள் அடங்கிய பட்டியலை சேகரித்து வைத்து, அதில் ஒரு பிரதியை அகில உலக அமெச்சூள் கழகத்தின் செய்தி ஸ்தாபனத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்புகள்

1. உலக சாதனை புரிந்த உடலாளருக்குக் கெளரவமாக வழங்கும் பதக்கம், அ.உ.அ. கழகத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த உடலாளரது நாட்டின் தேசியக் கழகம் அதற்கான விலையைக் கொடுத்தால், விருதுகள் சப்ளை செய்யப்படும்.

2. உலக சாதனைகள் எந்தெந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உண்டு என்பதை அதற்கானப் பட்டியலைப் பார்த்து (விதி 381) தெரிந்து கொள்ளலாம்.

3. அந்தந்த நாட்டின் தேசியக் கழகமானது, தங்களது தேசிய சாதனைகளை எப்படி அங்கீகரிப்பது என்கிற தருணத்தில், மேலே கூறியிருக்கும் அ.உ.அ. கழகத்தினர் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றிக் கொள்ளலாம்.