பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



90

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


தாண்டுபவரின் கால்கள் உதைத்தெழும் பலகையைத் தொடுவதிலிருந்து தொடங்கி, நீளத்தாண்டல் என்றால் 40 மீட்டர் தூரத்திற்கும், மும்முறைத்தாண்டல் என்றால் 35 மீட்டர் தூரத்திற்கும் காற்று வேகம் கணக்கிடப்படவேண்டும்.

சில போட்டியாளர்கள் 40 மீட்டர் அல்லது 35 மீட்டர் தூரத்திற்கும் குறைவான இடத்திலிருந்து தாண்டுவதற்காக ஒடத்தொடங்குவார்கள், அப்படியென்றால், அவர்கள் ஒடத் தொடங்கும் இடத்தில் இந்த ஓட்டத்தை ஆரம்பிக்கும் பொழுது, காற்று வேகத்தை கணக்கிட வேண்டும்.

காற்றறியும் கருவியை எங்கே வைப்பது?

நீளவாக்கில் ஒட்டப் போட்டியில் ஒடும்பொழுது, அந்த தூரத்தின் மையப் பகுதியிலும், தாண்டும் போட்டிகள் என்றால் உதைத்தெழும் பலகையிலிருந்து (Take of Board) 20 மீட்டர் தூரத்தில் (ஒடத்தொடங்கும் இடத்திற்கும் பலகைக் கும் இடையில்) காற்றறியும் கருவியை வைக்கவேண்டும்.

அந்தக் கருவியை ஒட்டப் பாதைக்கு வெளியே 2 மீட்டர் தூரத்திற்கு அப்பால் போகாமலும், தாண்டும் போட்டிகளில் தாண்டவரும் பாதைக்கு 1.22 மீட்டருக்குள்ளாகவும் பொருத்துதல் வேண்டும்.