பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

91


1. அதிகமறயூAவசமண உதவிசமதுனங்கள்
(Official Implements)
(விதி - 150)

1. எல்லா அகில உலகப் போட்டிகளுக்கும் பயன்படுகிற உதவி சாதனங்கள் யாவும் விதிகள் 161 முதல் 186 வரையில் குறித்துள்ள அளவுகளுக்கு ஏற்பவே, அமைந்திருக்க வேண்டும்.

2. எல்லா உதவி சாதனங்களும் அந்தப் போட்டியை நடத்துகின்ற பொறுப்புள்ளவர்களால் தான் வழங்கப்படல் வேண்டும்.

எந்தப் போட்டியானாலும் எந்தவிதமான சொந்த சாதனங்களையும் பயன்படுத்திக்கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை.

ஆனால், கோலூன்றித் தாண்டும் போட்டியில் பயன்படும் கோல்கள், ஒட உதவும் உந்து சாதனங்கள் (Starting Blocks) இவைகளைத் தனியார் கொண்டுவந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அவைகளும், விதிகள் விததிருக்கும் விதிமுறைகளுக்கேற்ப அமையப் பெற்றவைகளாக இருக்க வேண்டும்.

(விதி 162 ஐயும் 172 ஐயும் காண்க)