பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

93


கொடிகளின் நீளம் 0.25 மீட்டள் அகலம் 0.20 மீட்டள். அதைத் தாங்கும் குச்சியின் உயரம் 0.45 மீட்டர் ஆகும்.

2. ஒடுகளப் பாதையின் உட்புற எல்லைக் கட்டையிலிருந்து (Border) 0.20 மீ. தூரம் வெளிப்புறமாகக் கட்டை இல்லையென்றால் கோடாக இருந்தால், 0.30 மீட்டள் தூரத்தில் வைத்து, அளவுகள் எடுக்கப்படவேண்டும். (Measurements)

3. 400 மீட்டர் தூர ஓட்டத்திலும் அதற்குக் குறைவான தூர ஓட்டத்திலும் பங்கு பெறுகின்ற ஒட்டக்காரர்கள் ஒவ்வொருவருக்கும், ஓடுகிற பாதையென (Lane) தனித்தனியே இருக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் ஒரு ஓடும் பாதை யின் குறைந்த அளவு அகலம் 1.22 மீட்டள் இருப்பதுபோல் அமைக்க வேண்டும். அப்படி அமைகின்ற கோடுகள் 50 மி.மீ அகலம் இருப்பது போல போடவேண்டும்.

உட்புறத்தில் அமைந்த ஒடும் பாதையை மேலே 2வது பாராவில் குறித்தது போல் அமைக்க வேண்டும். மற்ற ஒடும் பாதைகளை ஒட்டி, கோட்டின் வெளிப்புற விளிம்பிலிருந்து 0.20 மீட்டர் தூரத்தில் வைத்தே அளக்கப்படவேண்டும்.

குறிப்பு : ஒவ்வொரு ஓடும் பாதையின் வலப்புறக் கோட்டிலிருந்து தான், அடுத்த ஓடும் பாதை அளக்கப்படவேண்டும். அதாவது ஒரு ஒடும் பாதையின் விலப்புற அகலக்கோட்டை, ஒவ்வொரு ஓடும் பாதையின் அகலத்தின் அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4. ஓடுகிற திசையானது, இடது பக்கத்தின் உட்புறமாக வளைந்து ஓடுவது போலவே அமைந்திருக்க வேண்டும்.