பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


13. தொடக்கமும் முடிவும்
(The start and the Finish)
(விதி - 162)

1. ஓட்டத்தை ஆரம்பிக்க இருக்கிற தொடக்கக் கோடும், முடிக்க இருக்கிற முடிவுக் கோடும், 0.05 மீட்டள் அகலத்தில் குறிக்கப்பட வேண்டும். அந்தக் கோடு ஓடுகளப் பாதையின் உட்புற ஓரத்தில் குறிக்கப்பட வேண்டும்.

ஒரு ஓட்டத்தின் மொத்த ஆரம்ப, முடிவு தூரத்தை அளக்கும் பொழுது, தொடக்கக் கோட்டின் (Starting Line) வெளிப்புற ஓரத்தில் அளந்து, முடியும் கோட்டின் இடத்தில் உட்புற ஒரத்தில் வைத்து அளந்து கணக்கிட வேண்டும்.

ஒடுகளப் பாதைகளில் (Lane) ஓடுகிற ஒட்டங்களைத் தவிர, மற்ற எல்லா ஓட்டங்களையும் வளைவுக் கோடாக (Curve) அமைத்து, அதில் நிறுத்தித் தான் ஓட விட வேண்டும். இப்படி ஒடுகளத்தில் அமைக்கிற பொழுது, எல்லா ஒட்டக்காரர்களும் ஒடத்தொடங்கி முடிக்கும் வரை சமமான தூரத்தை ஓடி முடிக்கின்ற சம வாய்ப்பினைப் பெறுவது போல், அமைத்து ஓடவிட வேண்டும்.

2. எல்லா ஓட்டங்களும் துப்பாக்கி ஒலி மூலம் அல்லது அதே போன்ற வேறு ஏதாவது ஒலியின் மூலம் எழுப்புகிற சத்தத்தின் பின்பே, ஒடப்படுமாறு விட வேண்டும். அதாவது, துப்பாக்கி ஒலியை மேலே முடிந்தவாறு உயர்த்தி