பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநி கர்ச மானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)

எல்லாவற்றுக்கும் மேலாக, 1921 செப்டம்பர் மாதத்தில் பாரதி காலமாவதற்கு முன்னர் அவர் எழுதிய கடைசிக் கவிதை எனக் கருதப்படும் ‘பாரத சமுதாயம்’ என்ற அற்புதமான கவிதையில், அவர் இந்தியாவிலும் சோஷலிச சமுதாயம் மலர வேண்டும் என்ற தாகத்தோடும் கேவகத்தோடும் பின்வருமாறு பாடிவைத்துச் சென்றிருக்கிறார்:

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை - வாழ்க

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
 மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?...........

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் ......

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் ......

இவ்வாறு பாரதியின் பல கவிதைகளின் மூலமாகவும் வசனப் பகுதிகள் மூலமாகவும், 1917-ம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின் ஆழமான சரித்திர முக்கியத்துவத்தை

17

அ. பு-2