இந்தியாவில் முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்களில் பாரதியும் ஒருவராக விளங்கினார் என்பதையும், மேலும் இதன் பெரும் செல்வாக்குக்கு அவரும் ஆட்பட்டிருந்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
3
மகாகவி பாரதியின் எழுத்துக்களைத் தவிர, பாரதி பாண்டிச்சேரியில் அரசியல் அஞ்ஞாத வாசம் புரிவதற்கு முன்பும் பின்பும் அவர் உதவியாசிரியராக வேலை பார்த்து வந்த மிகப் பழமையான தமிழ்த் தினசரியான சுதேசமித்திரன் பத்திரிகையும், அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் இளம் சோவியத் குடியரசில் நிகழ்ந்து வந்த சம்பவங்களைக் குறித்து, தானும் பல கட்டுரைகளை வெளியிட்டதோடு வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கத்தையும் அந்நாளில் வெளியிட்டு வந்தது. நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு பார்த்தால், சுதேசமித்திரன் ஒருபுறத்தில் மேலை நாட்டுப் பத்திரிகைகளும் செய்தி ஸ்தாபனங்களும் இளம் சோவியத் குடியரசைப் பற்றிப் பரப்பி வந்த பல்வேறு கட்டுக் கதைகளையும் பொய்ப் பிரசாரத்தையும் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் வந்ததோடு, மறுபுறத்தில் சோவியத் நாட்டில் நிகழ்ந்து வந்தவற்றைப் பற்றிய உண்மைகளை உள்ளவாறே எடுத்துக் கூறிய கட்டுரைகளை அயல்நாட்டுப் பத்திரிகைகளிலிருந்து எடுத்து வெளியிட்டும் வந்தது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். உதாரணமாக, இளம் சோவியத் குடியரசைப் பற்றி இங்கிலாந்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நியூ ஸ்டேட்ஸ்மென் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை
18