பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

இல்லார்க்கும் உள்ளார்க்கும் ஒரு பொதுவான கடவுளின் உண்மை மதத்தை அனுசரித்திருக்கிறது (தமிழகம் கண்ட லெனின்). நீலகண்ட பிரம்மச்சாரி 1905ம் ஆண்டின் முதல் ரஷ்யப் புரட்சியின் காலத் தொட்டே, தீவிரத் தேசிய வாத இயக்கம் தமிழ் நாட்டிலும் மும்முரமாகவே இருந்தது. மேலும் புரட்சி மனப்பான்மை கொண்ட அந்நாளைய இளம் தேச பக்தர்கள் பலர் அந்தப் புரட்சியைப் பற்றி அறிந்து கொள்வதில் மட்டுமல்லாது, ரஷ்யப் புரட்சியாளர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கையாண்ட முறைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். என்றாலும் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நரோத்னிக்குகளைப் பின்பற்றி வந்த சமூகப் புரட்சிவாதிகளின் நடவடிக்கைகளைப் பற்றிய புத்தகங்கள் முதலியவற்றையே அந்த இளைஞர்கள் அச்சமயத்தில் பெற முடிந்தது. அத்தகைய இலக்கியங்களை, இந்தியப் புரட்சி வாதிகள் மிகவும் மும்முரமாகச் செயல்பட்டு வந்த வங்காளத்திலிருந்தோ அல்லது ஐரோப்பாவிலிருந்த இந்தியப் புரட்சி வாதிகளிடமிருந்து, அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த பாண்டிச்சேரியின் வழியாகவோதான் அவர்கள் பெற்று வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் அதிகார பூர்வமான ரெளலட் அறிக்கை, 1908-ம் ஆண்டுத் தொடக்கத்திலேயே, சென்னையிலிருந்த 'பப்ளிக் ஒர்க்ஸ் இஞ்சினீயரிங் ஒர்க்ஷாப்பில் பயின்று வந்த மாணவர்களிடம் ரஷ்யர்களது ரகசிய ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளை விவரித்துக் கூறும் ஒரு பிரசுரத்தின் பல பிரதிகள் இருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறியது. எனவே பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஆயுதம் தாங்கிய கலகங்களைப் புரிவதிலும் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்கள் தமக்குள் ஸ்தாபன ரீதியாகத் திரண்ட போர்க் குணம் மிக்க கோஷ்டி ஒன்றும் தமிழ் நாட்டில் அன்று u, .

  1. 5

F - 111

21