இருந்தது. அந்த கோஷ்டியின் தலைவரே நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் மகாகவி பாரதிக்கும், எம்.பி.டி. ஆச்சார்யாவுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். 1908ல் தமிழ் நாட்டிலிருந்த தீவிரத் தேசியவாதிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டபோது, நீலகண்ட பிரம்மச்சாரி தலைமறைவாகி, இந்திய நாட்டின் பிற பகுதிகளிலிருந்த பயங்கரவாதத் தேசபக்தர்களோடு சேர்ந்து பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் தமிழ்நாடு முழுவதிலும் ரகசியமாகச் சுற்றுப் பயணம் செய்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பலாத்காராகத் தூக்கியெறிய வேண்டும் என்று ரகசியக் கூட்டங்கள் நடத்தி வந்ததோடு, இதற்காக, ஆயுதந்தாங்கிய இளைஞர்களைக் கொண்ட ரகசிய ஸ்தாபனத்தையும் திரட்டி வந்தார்.
1911-ம் ஆண்டின் ஆஷ் கொலை வழக்கு என்ற அந்தக் காலத்தின் பிரபல அரசியல் கொலை வழக்கில், நீலகண்ட பிரம்மச்சாரிதான் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பெற்ற “முதல்எதிரி”. அந்நாளில் திருநெல்வேலி ஜில்லாக் கலெக்டராக இருந்த எஸ். டபிள்யூ. டி. ஆஷ் என்ற வெள்ளைக்காரனே, நீலகண்ட பிரம்மச்சாரியின் சீடனான வாஞ்சி என்ற இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை புரிந்து கொண்டுவிட்டான். இதன் விளைவே மேற்கூறிய கொலை வழக்கு. 1908-ல் திருநெல்வேலி ஜில்லாவில் நிகழ்ந்த ஈவிரக்கமற்ற அடக்கு முறைக்கு ஆஷ்தான் பொறுப்பாளி. அவனே சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற முதல் தேசியக் கப்பல் போக்குவரத்துக் கம்பெனியைத் தோற்றுவித்தவரும், மாபெரும் தேசபக்தருயா என வ. உ. சிதம்பரம் பிள்ளையைச் சிறைக்குள் தள்ளி, இந்திய தேசியக் கப்பல் தொழில் முயற்சியை நசுக்குவதற்குக் கருவியாக விளங்கியவன். எனவே அப்போது முதற்கொண்டே , மேற்கூறிய புரட்சிவாதிகள் அவனைக் ‘குறி’ வைத்திருந்தார்கள். இறுதியில் அவன் வாஞ்சியின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானான். ஆஷ் கொலையானது, 1911- ல் இந்தியாவுக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வர உத்தே
22