பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

( 8 ) -- > சமூக க த தா ? இயக்கத்துக்கும் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய சிங்காரவேலு செட்டியாருடன், இவர் சென்னையில் தங்கியிருந்து கம்யூனிஸ்டுத் திட்டம் (Communist Manifesto) ஒன்றைத் தயாரித்து வெளியிட்டதாக எழுதியிருக்கிறார். (புதியா அலை, 26.1.1975 இதழ்). இந்நூலின் பிரதி இதுவரை நமக்குக் கிடைக்காத காரணத்தால், இதன் கீஉள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை. என்றாலும், 1922-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைவிதித்த புத்த கங்களின் பட்டியலைப்பற்றி இந்திய நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள தஸ்தாவேஜியில், சென்னை, செங்கல்பட்டைச் சேர்ந்த மில்லர் அன் கம்பெனி அச்சிட்டு வெளியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுச் சமஷ்டிக் கழகம், (The Commmunis (Communist Federal League of India) என்ற நூலும் இடம் பெற்றுள்ளது. மேலும், இருபதாம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் உளவு இலாகாவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தவரும், இந்தியாவில் கம்யூனிஸம் (1926) என்ற ரகசிய அறிக்கையை எழுதியவருமான ஸெஸில் கோயில், நீலகண்ட ஐயர் எழுதி வெளியிட்ட 'இந்தியக் கம்யூனிஸ்டுச் சமஷ்டிக் கழகம் என்ற 1922-ல் தடை செய்யப்பட்ட நூலும், அப்போது ஐரோப்பாவிலிருந்து எம். என். ராய் வெளியிட்டு வந்த வான்கார்டு (Vangurd) என்ற கம்யூனிஸ்டு மாதமிருமுறையின் விளைவேயாகுமென எழுதியிருக்கிறார். (Documents of the History of the CPI, Vol. I). நாம் இதிலிருந்து நீலகண்ட பிரம்மச்சாரி காரல் மார்க்ஸின் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிடவில்லை. மாறாக, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்தை உருவாக்குவதற் காக, கம்யூனிஸ்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரோ அல்லது அவரது கோஷ்டியோ தயாரித்திருந்த அறிக்கையைத்தான் வெளியிட்டார் என்று நாம் முடிவு கட்டலாம். இது உண்மையானால், தமிழ்நாட்டில் கம்யூ னிஸ்டு இயக்கத்தை உருவாக்குவதிலும், அக்டோபர் புரட்சி யின் செய்தியைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கிய வர்களில் அவரும் ஒருவர் என்றே நாம் கூறலாம். இரு , நீ பல் உட்க 2T 24