உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்க்சிய-லெனினியத்தையும், அக்டோபர் புரட்சியின் பணியையும் செய்தியையும் பற்றித் தமிழ் நாட்டின் சாதாரண வாசகர்கள் சிங்காரவேலரின் எழுத்துக்ககரின் மூலமே முதன் முதலில் தெரிந்து கொண்டனர் எனலாம். அவரும் இத்தகைய எழுத்துக்களைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்தார்.

லெனின் மறைந்தபோது

லெனின் காலமானபோது, அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப்பின் உடன் வெளிவந்த சிங்காரவேலரின் லேயர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையின் 37-1-1924 தேதியிட்ட இதழ், "தோழர்நிக்கொலாய் லெனின் - நினைவாஞ்சலி" என்ற கட்டுரையை முதல் பக்கத்தில் தாங்கி வெளிவந்தது . அதில் சிங்காரவேலர் இவ்வாறு எழுதியிருந்தார்: "மானிடத் துயரங்களைக் களைய முயன்று வந்துள்ள மனித புத்திரர்களிடையே நிக்கொலாய் லெனின் இன்று ஈடிணையற்று விளங்குகிறார். வறுமையின் காரணம் பற்றியும் அதற்கு முடிவு கட்டுவது பற்றியும் ஏனையோர் யாவரும் தெளிவற்ற கற்பனைகளில் ஈடுபட்டுக் கொண்டும், சமுதாய நீதிக்கான கடைசி எல்லை தானம் தான் என்று உபதேசித்துக் கொண்டும் இருந்த வேளையில், உலகத் துயரங்களுக்கான உண்மையான காரணம் சிலர் பலரைச் சுரண்டி வாழ்வதிலேயே அடங்கியிருந்ததை நிக்கொலாய் லெனின் கண்டறிந்தார்; இந்தச் சமுதாய அநீதியைத் தமது சொந்த நாட்டில் சாத்தியமற்ற தாக்குவதிலும் அவர் வெற்றி கண்டார். உலகத் தொழிலாளர்களிடையே இன்று ரஷ்யத் தொழிலாளி தான் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகக் கருத முடியும். அவரது தோழர்களான நாம் இப்போது யாருடைய மரணத்துக்காக வருந்துகிறோமோ, அந்த அலுப்புச் சலிப்பற்ற உழைப்பாளியே இதற்குப் பிரதான காரணம்."

லேபர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையைத் தவிர, சுதேசமித்திரன் பத்திரிகையும் 25-1-1924 அன்று லெனினது

31