பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசையுடன் எழும்பும் வகை
எதுவென நினைத்துவகை
எழுவதை இயற்று பெரியோய்
திசைவளர் புகழ்க்குரிய
லெனின் எனும் இயற்பெயர்
தினகர விரற்குரவனே!

பாஸ்கர ஆதிமூர்த்தி என்ற இந்த இளம் கவிஞர், காசி நகர வாசியாக, திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகளான கே.எஸ்.முத்தையா அண்டு கம்பெனி, காசி நகரில் வைத்து திருந்த கிளைக்கடையோடு சம்பந்தப்பட்டவராக இருந்தவர் என்ற விவரத்தைத் தவிர, இவரைக் குறித்து வேறு விவரம் ஏதும் தெரியவில்லை. அவர் லோகோபகாரியில் வேறு பல பாடல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல் பொது வாக சமத்துவத்தைப் பற்றிக் கூறும் பாடல்; மற்றொன்று லெனினையும் காந்தியையும் ஒப்புநோக்கிப் பாடிய பாடல்.

சமத்துவம் பற்றிய முதற் பாடலின் கருத்து வருமாறு: இன்று உலகம் யாருக்குச் சொந்தமாக இருக்கிறதோ அந்தச் சிலருக்கு அது சொந்தமானதல்ல; அது எல்லோருக்கும் சொந்தமானது. மனிதகுலம் பிறப்பித்த எல்லாக் கருத்துக்களிலும் சமத்துவமே மிக உன்னதமானது. அது போருக்கெல்லாம் முடிவுகட்டும் போர் பெற்ற குழந்தை. அத்தகைய போர் ரஷ்யாவில் வெற்றிபெற்று, கொடுங்கோலாட்சியை முறியடித்து, சமத்துவத்தைத் தோற்றுவித்துள்ளது.

லெனினையும் காந்தியையும் பற்றிய பாடலில் இருவரும் பின்வரும் விதத்தில் ஒப்புநோக்கப்பட்டிருந்தனர்: இருவேறு நாடுகளில் இரு பெரும் தலைவர்கள் உள்ளனர். எனினும் இருவரும் ஒரே லட்சியத்திற்கே, போர்களையும் வறுமையையும் எதேச்சாதிகாரத்தையும் ஒழிக்கும் லட்சியத்துக்கே போராடுகின்றனர். இந்த இருவரில் லெனின் ஜாரின் கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போரிட்டு வென்று, ஏழை மக்களை விடுவித்து அவர்களுக்கு உணவும் சுதந்திரமும் வழங்கினார். காந்தி இந்திய விடுதலைக்காகப் போராடி வரு

33

அ.பு-3