பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாதும் என் ஊரே
எவரும் என் கேளிரே
பூதலம் யார்க்கும்
பொதுவே யென்-றோதிய நற்
போதனையை முற்றும்
புதிய ருஷியா மக்கள்
சாதனையிற் கொண்டார்
தமக்கு.

மேலும், நெல்லை சோ. சண்முகம் மொழி பெயர்த்து வெளியிட்ட டைசன் கார்ட்டரின் “ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்” என்ற நூலுக்குத் தாம் எழுதிய முன்னுரையில் கவிமணி பின்வருமாறு எழுதியிருந்தார் :

“இரஷ்ய ஆட்சி பொது மக்கள் ஆட்சி; பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள்; தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை; புரப்பாரும் இல்லை; ஆண்டியும் இல்லை; ஆண்டையும் இல்லை; வயிற்றை எக்கித் திரிவோரையும் வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொது நலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூலோக சுவர்க்கம் என்பதற்கு ஐய மென்ன?”

இதே போல், பாரதியின் சமகாலக் கவிஞரும். பல நூல்களைக் எழுதிக் குவித்தவருமான யோகி சுத்தானந்த பாரதி பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் பல்லாண்டுக் காலத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டு, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்த ஆசிரமத்தை விடுத்து வெளியேறி வந்த பின்னர், ஐம்பதாம் ஆண்டுகளின் மத்தியில், சோவியத் யூனியனுக்குச் சென்ற ஒரு கலாசாரப் பிரதிநிதிக் குழுவில் தாமும் ஒருவராகப் போய் வந்தார். இந்தப்

45