பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறுதியாக, மாபெரும் அக்டோபர் புரட்சியின் உன்னதமான லட்சியங்களின் செல்வாக்கு தமிழ் எழுத்தாளர்களை ஆட்கொண்டு வரும் வரவேற்கத்தக்க வளர்ச்சிப் போக்கு ஆண்டுதோறும் தொடந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றே சொல்லலாம். எனவே, அத்தகைய எழுத்தாளர்கள், அவர்களது படைப்புக்கள் முதலியவற்றையெல்லாம் பட்டியல் போட்டுத் தரும் முயற்சியும் கூட, இந்தக் கட்டுரையின் எல்லையைத் தாண்டிச் செல்லும் தனிக்கட்டுரையாகப் பரிணமித்து விடக்கூடும் என்றே கருதுகிறேன்.