பக்கம்:அங்கும் இங்கும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101
 

லாம். ஒரே பலகை இரண்டொரு ஆண்டுக்கு வரலாம் நோட்டில் எழுதுவதென்றால் ஆண்டுக்குப் பல நோட்டுகள் வாங்கவேண்டியிருக்கும். அதற்கு நிறைய செலவல்லவா?" இப்படிப் பதில் கூறினார் என் மனைவி. உண்மையான பதில், ஆனாலும் நம் ஏழ்மையை இப்படி வெளிப்படுத்தலாமா என்று என் நெஞ்சம் வாடிற்று. சுதந்திரம் பெற்ற அண்மை காலமல்லவா அது.

மேற்கொண்டு சில வினாக்கள் பதில்களோடு நிகழ்ச்சி முடிந்தது. மாணவியொருத்தி நன்றி கூறி முடித்தாள். நாங்கள் எழுத்து, வெளியே செல்ல, ஓரடி எடுத்து வைத் தோம். அவ்வமயம் ஒரு மாணவி தலைதெறிக்க ஓடி வந்தாள். எங்களைத் தாண்டி முன்னேயிருந்த தலைமை ஆசிரியையிடஞ் சென்று நின்றாள்.

“விருத்தினர்களுக்கு ஒரேவொரு வேண்டுகோள் விடட்டுமா?” என்று அந்த அம்மாளின் அணுமதியைக் கோரினாள்.

“இவ்வளவு நேரம் கேட்டிருக்கக்கூடாதா” என்றார் அந்த அம்மாள்.

“பரவாயில்லை. கேட்கட்டும்” என்று சமாதானப்படுத்தி அனுமதி பெற்றேன். மாணவிக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.

“அம்மா, நான் ‘பேப்பர்’ கொடுக்கிறேன். கொண்டு போகிறீர்களா ?” என்று என் மனைவியைப் பார்த்து வேண்டினாள். என் மனைவி திகைத்தார். பளிச்சென்று நான் குறுக்கிட்டேன்.

“எங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டு, என் மனைவி