பக்கம்:அங்கும் இங்கும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
 

பங்குத் தகராறினால், நாட்டின் நீர்வளத்தில் பெரும் பகுதி வீணாக ஒடி, கடலில் கலப்பதா ? இன்னும் எத்தனை காலத்திற்கு "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா ?’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன ? அரசியல் பெரியவர்கள், பெரிய விவகாரங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.

சோவியத் ஒன்றியம் அமைந்த பிறகு, அங்குப் பெரும் அளவில் அணைகட்டுதலும், தேக்கம் அமைத்தலும், நீர் மின்சார உற்பததி செய்தலும் நடந்திருப்பதாகப் பின்னர் படித்தறிந்தோம், கூட்டுப் பண்ணைகளில் இயந்திரக் கலப்பைகளைக்கொண்டு உழுகிறார்கள். இயந்திர உதவியால் தூற்றித் தானியங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான விவசாயப் பன்னையைக் கண்ட நாங்கள் வியந்தோம். நீங்கள் கண்டாலும் வியப்படைவீர்கள்.

சில நாள்களுக்குப் பின், தாஷ்கண்டிலிருந்து மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். தாஷ்கண்டில் நாங்கள் கவனிக்காத ஒன்றை மாஸ்கோவில் கவனிக்தோம். மாஸ்கோவில் கல்விக் கூடம் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பரந்த விளையாட்டு மைதானம் கிடையாது. பெரு நகரமாகையால் இட நெருக்கடி அதிகம். ஆகவே அநேகமாக, கல்விக்கூடத்தோடு இணைந்த விளையாடுமிடம் சிறிதாக இருக்கும். இந்நிலைக்கு என்ன மாற்று ? பல கல்விக்கூடங்களுக்கும் பொதுவாக, இங்கும் அங்கும், பரந்த விளையாட்டு மைதானங்களை வைத்திருக்கிறார்கள். இம்முறையை விளக்கியபோது, இடநெருக்கடியின் வலிமையைத் தெளிவாக உணர்ந்தோம்.

இத்தகைய இட நெருக்கடியிலும் தொடக்க நிலைப் பள்ளியில் கூட, ஒரு பக்கம் மலர்ப் பூங்காவும், வேறொரு