பக்கம்:அங்கும் இங்கும்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
 

எடுக்கும் அகவிலை வாணிகமல்ல, அவர்கள் செய்தது. அரசியல் சூதாட்டத்தின் பயிற்சியுமல்ல அது.

பிறர் துன்பம் கண்டு துடித்தல் இயற்கை. அம்மானிட இயல்பின் மலர்கள். மேற்கண்ட இரு செயல்களும். இம்மலர்களை வாடாமல் வதங்காமல் காக்க வேண்டாவா ? மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தாலும் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா ? இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா ? மானுடம், சொத்து காக்கும், வெறும் இரும்புப் பெட்டியாக மாறி விட்டதா ?

இல்லையென்றால், பஞ்சைகள் பக்கம் பார்வை திரும் பட்டும். கை நீளட்டும், நன்கொடை பெருகட்டும், பட்டினி ஒடட்டும், வாழ்வு தழைக்கட்டும் என்று உங்கள் உள்ளம் உரைக்கிறதா ? நல்லது, பகுத்துண்டு வாழ்வோம் வாரீர்.