பக்கம்:அங்கும் இங்கும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
 

பக்கம் காய்கறித் தோட்டமும் காட்சியளித்தன. பள்ளிக் கூடம் கவர்ச்சிக் கூடமாகவும் விளங்க வேண்டுமென்பது சோவியத் மக்களின் கொள்கை. எனவே, அழகிய மலர்கள் திறைந்த தோட்டம் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி.

இடநெருக்கடியான நகரங்களில் இருக்கும் கல்விக்கூடங்களில் காய்கறித் தோட்டத்திற்கு இடம் ஒதுக்கியிருப்பது சரியா ? வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா? காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டா பசியாறப் போகிறது ? இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. இரண்டொரு நாள்களுக்குப்பின் பல பள்ளிகளிலும் இந்நிலையைக் கண்ட பின், மெல்ல எங்கள் ஐயங்களை வெளியிட்டோம். அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற விளக்கத்தின் சாரம் வருமாறு :-

படிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும் ; தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும், உயர்நிலைப்பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்கவேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும்; கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது. வளரும் பருவத்தினர், ஏற்ற கைத்தொழில்களில், செயல் திட்டங்களில், முறையாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கி வேண்டும்.

தோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி