பக்கம்:அங்கும் இங்கும்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
 

இட நெருக்கடி இருப்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்கள். இட நெருக்கடியிலும் மார்க்கில் உயர்ந்தவர்களோடு நிற்காமல, மார்க்கில் குறைந்தவர்களையும் தேடிப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால், பிந்தியவர்களுக்குப் பலன் உண்டா ? அவர்கள் பாஸ் ஆவார்களா ? அவர்களாலே கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராதா ? நல்ல மணிகளாகச் சேர்த்தால் அத்தனையும் தேறின என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ! இப்படியெல்லாம் என் அறிவைக் கலக்கிக் கொண்டேன். அக்கலக்கத்தை அறிவித்தும் விட்டேன். விளக்கம் தந்தனர். விளகக்கத்தின் சுருக்கம் இதோ:

மனிதன் மாறும் இயல்பினன். அவன் வளர்வதும் உண்டு; தேய்வதும் உண்டு. வளர்வானோ தேய்வானோ என்பது அவன் அவன், முன்பின் சூழ்நிலையையும் அவன் அவன் பெறும் வசதிகளையும் ஊக்கத்தையும் பொறுத்தது. சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து, வேண்டுமென்றே மார்க்குக் குறைந்தவர்களைச் சேர்த்ததால், நல்ல பலனே விளைகிறது. அவர்கள் மார்க்குக் குறைந்தவர்கள் என்பது சேர்க்கிறபோதே தெரிகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளியை அடிக்கடி கவனிக்கும் மருத்துவர்போல், மார்க்குக் குறைந்தவர்களை அடிக்கடி கவனிக்கிறோம். அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி வழிக் காட்டுகிறோம். நம்பிக்கை ஊட்டுகிறோம். ஊக்குவிக்கிறோம். மற்றவர்களை விட அதிகம் படிக்க வைக்கிறோம். அறிவு வளர்ச்சி என்பது பெருமளவு முயற்சியின் விளைவே. எனவே, மார்க்குக் குறைந்தவர்களும் கல்லூரிகளில் கொடுக்கும் தனிக் கவனத்தால், வசதிகளால், தூண்டுதல்களால், தோழமையால் மற்றவர்களைப்போல் தேறிவிடுகிறார்கள்.

அவர்களில் தோற்பவர்களே இல்லையா ? கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போய் விடுவோர் இல்லையா ? உண்டு. ஒரு சிலர் உண்டு. பள்ளிப் படிப்பின் இறுதியில்