பக்கம்:அங்கும் இங்கும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இலாயக்கற்றவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கையில் சிறு விழுக்காடே கல்லூரியை விட்டுவிடுவோர் எண்ணிக்கை. அப்படி விலகுவோர், மனக்குறையோடு, கசப்போடு வெறுப்போடு. வஞ்சம் தீர்க்கும் போக்கோடு வெளியேறுகிறார்களா ? இல்லை. நம் சமுதாயத்திடம் வஞ்சம் இல்லை. எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தார்கள். வசதிகளையும் வழங்கினார்கள். கொடுத்த ஊக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. மட்டந்தட்ட முயலவில்லை. மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தும், நாமே தவறி விட்டோம். அவர்களைக் குறைசொல்ல என்ன இருக்கிறது ? சமுதாயத்தை வெறுப்பதற்கும் என்ன இருக்கிறது ? நம்மை நாமே நொந்து கொள்வானேன் ? முதல் முயற்சி முன்பின் தான் இருக்கும். மூன்று தலைமுறை கல்லூரிக்குச் சென்று வந்தபின், நாங்களும் நன்னிலைக்கு உயர்ந்துவிடுவோம். இப்படி எண்ணுகிறார்கள் பாதியிலே வெளியேறியவர்களும்.

சமுதாய ஒருமைப்பாட்டிற்குக் கொடுக்க வேண்டிய விலை, பின்னணியில் தயங்குகிறவர்களையும் தேடிப்பிடித்து, வாய்ப்பைக் கொடுத்து, வசதியைப் பெருக்கி, தட்டிக்கொடுத்து வளரவிடுவதே. அதற்காகும் செலவைக், கவனத்தை, உழைப்பைத் தாராளமாகக் கொடுப்பதால், ’பல நாட்டு நாடோடிகளின் சமுதாயமாக இருந்தும், அமெரிக்க சமுதாயத்தில் துரோகிகள் குறைவாக உள்ளனர். ’அமெரிக்கர்’ மிகமிக அதிகமாக உள்ளனர். நிறைய "மார்க்கு’ வாங்கியவர்கள் இடத்தை மற்றவர்கள் பறித்துக் கொள்ளலாமா ? இதையும் கேட்கத் தவறவில்லை நான். நோய் இல்லாத ஒருவருக்கு, உடம்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவருக்கு, எதற்கு ஆஸ்பத்திரி படுக்கை ? அவர் அப்போதைக்கப்போது வந்து போனாலே போதுமே. நோய்வாய்ப்பட்டிருப்பவரையல்லவா ஆஸ்பத்திரியிலே வைத்திருந்து வேளைக்கு வேளை பார்த்துக் குணப்படுத்த வேண்டும். 'மார்க்குப் பெரியவர்கள்,