பக்கம்:அங்கும் இங்கும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
31
 

காவியங்களைக் கற்று, வீறு கொள்ளாதவர்கள் அல்லர் அவர்கள். காதற் கதையென்று, பச்சை பச்சையாக, பாலுணர்ச்சி யூட்டுப வையல்ல, சோவியத் நூல்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

"ஒட்டப் படிப்பு நூல்களாகிய இவற்றை ஒதுக்கிவிடவில்லை சோவியத் மக்கள். ஆயினும் இவற்றையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும் செக்கு மாடுகளாகவுமில்லை அவர்கள் அவர்கள் படிக்கிற நூல்களிலே நூற்றுக்கு எண்பது விழுக்காடு 'சீரியஸ்' நூல்கள். அதாவது ஊன்றிப் படிக்க வேண்டியவை' என்று அவ்வெளியீட்டுக் கழக அதிகாரி ஒருவரிடமிருந்து தெரிந்து கொண்டோம்.

விகடத்துக்கு அப்பால் விரியாத நம் படிப்பும் கிளு கிளுப்பிற்கு மேல் தெரியாத நம் காவியமும் என்றைக்கு மாறுமோ என்று ஏங்குகிறீர்களா ? ஏங்கிப் பயன் என்ன ? விழுங்குணவை விழுங்குவதற்கும் உணர்ச்சியற்ற சுகவாசிகளாயிற்றே நாம். துரங்கி முன்னேற முடியாது ஐயா, முடியாது !

மாஸ்கோ நகரத்திலே ஒரு பெரிய நூலகம் உள்ளது, அதன் பெயர் லெனின் நூலகம். உலகப் புகழ் பெற்ற, உலகத்தின் மிகப்பெரிய நூலகங்கள் மூன்று அவையாவன : இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் மியூசிய நூலகம், வாஷிங்டனிலுள்ன காங்கிரஸ் நூலகம், மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம், முதல் இடத்திற்காக இம்மூன்றிற்கும் பலத்த போட்டி என்று கேள்விப்பட்டோம். ஆகவே, மாஸ்கோ லெனின் நூலகத்தைக் காண விழைந்தோம். அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாள் முற்பகல் முழுவதும் அங்கு இருந்தோம்.

லெனின் நூலகம் பல அடுக்குக் சட்டிடத்தில் உள்ளது. இது பொது நூலகம். பொது மக்கள் அனைவரும் இதை பயன்படுத்தலாம். நூல்களை மட்டுமா படிக்கலாம் ? நூல்