பக்கம்:அங்கும் இங்கும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
 

களோடு பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். வீட்டிற்கும் நூல்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிக்கலாம்.

நூல்கள், பல மாடிகளில், பல பகுதிகளில், ஒழுங்குபடுக்தி, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நூல் ஒன்றை வேண்டுவோர், தாமோ, துலகப் பணியாளரோ, அதைத் தேடிச் சென்று எடுத்து வருவதென்றால், காலதாமதமாகும். அதற்குப் பரிகாரம் கண்டுள்ளனர்; நூல் விரும்பி, தாம் விரும்பும் நூலைப் பற்றிய தகவலை மைய இடத்திலுள்ள பணியாளர்களில் ஒருவரிடம் அறிவிப்பார். அப்பணியாளர் அதற்கான குறிப்பை எழுதி, சுழலும் தொட்டில் ஒன்றில் வைப்பார். அத்தொட்டில் கீத் மாடத்திலிருந்து, உச்சி மாடம் வரை சுழன்று கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாடத்திலும் தொட்டில் நிற்க இடமொன்று இருக்கிறது. தொட்டில் சில வினாடி நிற்கும் அங்கே ஒரு பணியாளர் இருப்பார். அப்பணியாள், வருகிற குறிப்புகளில் தன் மாடிக் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.

தொட்டில் அடுத்த மாடிக்குச் சென்றுவிடும், உச்சிவரை சென்று திரும்பும் ; திரும்பும்போது ஒவ்வொரு மாடத்திலும் நிற்கும். மேற்சென்று திரும்புவதற்கு இடையில் குறிப்புகளின்படி கிடைத்த நூல்களைத் தொட்டிலில் இடுவார்கள், அலை கீழ் மாடத்திற்குச் செல்லும் ; அங்கு அவற்றை எடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுப்பார்கள்.

அங்கு வரும் படிப்போர் கூட்டத்தையும் பல மாடிகளில் எத்தனையோ பெரும் பரப்புகளில் பல இலட்சக்கணக்கான நூல்கள் பகுத்து, ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் கண்டோரே, லெனின் நூலகத்தில் அன்றாடம் நடக்கும் நூல் வழங்கு வேலையை, இயந்திர இயக்கமின்றிச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

லெனின் நூலகத்தில், எத்தனை மொழிகளில் நூல்களும் வெளியீடுகளும் உள்ளனவென்று வினவினோம், நூற்று