பக்கம்:அங்கும் இங்கும்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
 

அக்காலத்தில், உழுது விதைத்து, அறுப்பார்க்கு உணவில்லை. உணவில்லாவிட்டால், என்ன ? பிணிகள் உண்டு. குளிருக்கு உடையில்லை. ஆயினும் என்ன ? உறைந்து விறைத்துப் போனால், பிறவித் துன்பம் அன்றோடே அகன்றது. இந்நிலையைக் கண்டு பொங்கி எழுந்தனர் பலர்; திட்டம் தீட்டினர் தலைவர்கள்; மன்னராட்சியைக் கவிழ்க்க வழி வகை ஆய்ந்தனர்; சோவியத் ஆட்சியை நிறுவ முயன்றனர்; அத்தகைய முயற்சி, எடுத்ததும் வெற்றி பெறவில்லை. முதன் முறை தோல்வி, பலருக்குத் தண்டனை அடுத்தடுத்து இப்படியே, போராட்டம், தோல்வி, தண்டனை, தலை மறைவு. ஆகவே, நாடு முழுவதும் இதைப் பற்றிய எண்ணம், குசுகுசுப் பேச்சு.

'வல்லமை பொருந்திய பேரரசைப் படிப்பாளிகள் சிலரது தலைமையில் பாமரர் பலர் எதிர்த்துக் கவிழ்ப்பது எளிதான செயலா ? இப்போராட்டத் திட்டங்களுல் பல இரகசியமாகத் தீட்டப்பட்டன. இரகசியத் திட்டங்களைத் தீட்டியவர்களில் லெனினுக்கே தலைமை இடம்.

"மன்னராட்சியைக் கவிழ்க்கும் புரட்சியில் மக்கள் பங்கு என்ன ? பலதுறைப் பாட்டாளிகளும், பலவூர்ப் பொது மக்களும். இரகசியமாக லெனினோடும் அவரது சகாக்களோடும் தொடர்பு கொண்டனர். இரகசியக் கட்டளைகளைப் பெற்றனர். மற்றவர்களைப் போல, மாணவ சமுதாயமும் இரகசியத் தொடர்பு கொண்டது; புரட்சிப் பணியில் தங்களுக்கும் பங்கு கேட்டது. எங்கெங்கே, என்னென்ன வேலைகளை எவ்வப்போது செய்து முடிக்க வேண்டுமென்று, ஆணை கேட்டது. பொது மக்களில், பல பிரிவினருக்குப் பல வகையான போராட்டங்களைக் கிளர்ச்சிப் பணிகளை, உயிர் கொடுக்கும் பணிகளைக் கொடுத்த லெனின், மாணவர்களுக்கு விறுவிறுப்பில்லாத் பணியையே கொடுத்தார். என்ன பணி அது ?

"படியுங்கள்: படியுங்கள் ! மேலும் மேலும் படியுங்கள்!" வகுப்பாசிரியரிடம் எதிர்பார்க்க வேண்டிய இவ்வறவுரையை