பக்கம்:அங்கும் இங்கும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
 

கிளர்ந்து எழுந்தனர். வேலை நிறுத்த ஏற்பாடு செய்தன; கல்லூரிகளுக்குச் செல்லாமல், வேலை நிறுத்தமும் செய்தனர் எல்லாரும் அல்ல ; ஏராளமானவர்கள்.

வேலை நிறுத்தத் தலைவர்கள்-மாணவர்களே-தந்தி கொடுத்தனர் மகாத்மா காந்திக்கு. கல்லூரி மாணவர்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். நேருவை நிபந்தனையின்றி விடுதலை செய்யும்வரை மாணவர் வேலை நிறுத்தம் தொடரும். அதற்குத் தங்கள் ஆசி தேவை.' இதுவே தந்தி.

பதில் தந்தி வந்தது. 'தேசத் தொண்டர்கள் ஆகும் பொருட்டுக் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறி விடுங்கள். இல்லையேல் மாணவர்களாக இருந்து கல்லூரிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி படியுங்கள்.' ஆசிச் செய்தியா இது ? ஆதரவா இது ? பதிலைப் பார்த்ததும், துடித்தனர். திட்டினர் சிலர் ஆனாலும் அடுத்த நாளே திரும்பிவிட்டனர் கல்லூரிகளுக்கு.

"ஆங்கில ஆட்சியினர் நடத்தும் கல்விக்கூடங்களை விட்டு வந்துவிடுங்கள். ஆங்கிலக் கல்வி நமக்குத் தேவையில்லை" என்று உபதேசம் செய்யும் காந்தியார், இப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா ? இதை சாக்காக வைத்தாவது ஆங்கிலக் கல்வியை ஒட்டையாக்கி யிருக்கலாமே!" இப்படி அங்கலாய்த்தனர், மாணவ மணிகள்.

மாதங்கள் பல சென்றன. மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். பல இடங்களுக்குச் சென்றார். பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். அந்த சுற்றுப் பயணத்தில், வேலூரில், மாணவர் கூட்டமொன்றிற்கு அறிவுரை வழங்கினார். கேள்விச் சீட்டொன்று அவரிடம் சேர்ந்தது. ஆங்கிலக் கல்விக் கூடங்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லும் தாங்கள். நேரு கைதானதைக் கண்டிக்கும் பொருட்டு, சென்னைக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தஞ் செய்ததை, ஆதரிக்க வில்லையே, ஏன்?.