பக்கம்:அங்கும் இங்கும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
 


“நான் தமிழில் பேசலாமா ?” என்றார், அவ்வாலிபர். உடன் வந்தவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு. “நன்றாகப் பேசலாம். தங்கள் பெயர் என்னவோ ?” என்றேன்.

‘ என் பெயர் ரூதின் என்பது ; இது இரஷ்யச் சொல்.தமிழில் ‘செம்பியன்’ என்று பெயர் என்றார்.

“தாங்கள் என்னை எப்படி அறிவீர்கள் ? தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”

“தாங்களும் வேறு இந்தியக் கல்வியாளர்கள் இருவரும் இங்கு வருவதாகப் பத்திரிகையில் படித்தேன். தாங்கள் தமிழர் என்பதை, என்னுடன் லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கும் திருமதி ஆதிலட்சுமி அம்மாள் சொன்னார்கள். அவர்களுக்கு இப்போது வகுப்ப வேலை இருப்பதால் நான் மட்டும் வந்தேன்” என்பது செம்பியன் பதில்.

செம்பியன், பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் ஆசிரியர் என்பதை அறிந்தேன். தமிழ் ஆசிரியர் மட்டு மல்ல ; தமிழில் ஆர்வம் உடையவர் என்று அறிந்து மகிழ்ந்தேன். அங்குத் தமிழ் துறையில் சில மாணவர்கள், நம் தாய் மொழியைப் பற்றுதலோடு கற்கிகிறார்கள் என்று கேட்டுப் பூரித்தேன். தெருவெல்லாம் தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்” என்ற கட்டளையைப் பிற நாட்டவராவது பின்பற்ற முனைந்துள்ளதை எண்ணித் திருப்தி கொண்டேன். உலகமெல்லாம் தமிழ் கேட்கும் நாளும் வருமோ என்று எண்ண வானில் உயரப் பறந்தேன்.

தம் பல்கலைக் கழகத்திற்கு வந்து, தமிழ் துறையைக் கண்டு, அங்குள்ள மாணவர்களோடு பேசும்படி கேட்டார் செம்பியன். ஒப்புக்கொள்ள கொள்ளை ஆசை. பயண ஆணையரைக் கேட்டேன். நிகழ்ச்சிகள் நெருக்கமாகச்