பக்கம்:அங்கும் இங்கும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
 

டோம். இம்முறை பல பள்ளிகளில் உண்டா ? இல்லை சோதனையாக இரண்டொரு பள்ளிகளில் கையாண்டு பார்க் கிறார்கள். விளைவை, சிக்கல்களை, விழிப்பாகக் குறித்துக் கொள்கிறார்கள். மொழிப் பகையை நீக்கி, துணிந்து, புது முறையைச் சோதிப்பது எங்களைக் கவர்ந்தது. அதிகாரம் இருக்கிறதென்று ‘இட்டது சட்டமென்று, எடுத்த எடுப்பிலே பல பள்ளிகளுக்கும் ஆணையிடாமல் சோதனைக்காகச் சில பள்ளிகளை மட்டும் அனுமதித்திருப்பது எங்களுக்குத் தெளிவைக் கொடுத்தது. கல்விமுறை மாற்றம் காலத்தோடு விளையாட்டு. அது வினையாக-தீவினையாக-மாறாதிருக்க வேண்டுமென்றால் கல்விச் சோதனையும் தேவை . அதே நேரத்தில் அது குறுகிய அளவிற்குட்பட்ட சோதனையாகவும் இருக்கவேண்டும்’ என்று உணர்ந்தோம். கட்டுக்குட்பட்ட முன்னோட்டமே கலவி மாற்றத்திற்கு வழி என்று உங்கள் நெஞ்சமும் கூறுகிறதா?

லெனின் கிராட் நகரில், ஜார் மன்னனது மாளிகை இருக்கிறது. இப்போது யாரும் குடியிருக்கும் மாளிகையாக இல்லை. கலைக்கூடமாக இருக்கிறது. ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து புரட்சியில் மக்கள் சிந்திய இரத்தம், ஆறேயாகும். இழந்த உயிர்களும் எத்தனை - எத்தனையோ கொண்ட பலிகளும் கொடுத்த பலிகளும் ஏராளம். அழிந்த பொருள்களுக்கும் அளவில்லை. ஆயினும் இங்கும் பிறவூர்களிலும் மாளிகைகளையும் பிற கட்டிடங்களையும அவர்கள் அப்படியே காப்பாற்றியிருப்பதுபோல வேறெந்த நாட்டினரும் காப்பாற்றியிருப்பார்களா என்பது ஐயமே.

லெனின் கிராடிலுள்ள ஜார் மாளிகை பெரியது அழகியது. அதை அன்றிருந்தபடியே அருமையாகக் காத்து வருகிறார்கள். தொல்பொருள் காட்சிக்காக அல்ல பயனுக்காகக் காத்து வருகிறார்கள். சிறந்த பல ஒவியங்களும் சிற்பங்களும், வேறு கலைப் பொருள்களும் அங்குக் காட்சிக்காக வைக்கப்பட்