பக்கம்:அங்கும் இங்கும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

டுள்ளன. அவை அலங்கரிக்கும் மண்டபங்களும் ஒன்றிரண்டு அல்ல ; பல அவற்றில் சிலவற்றைச் சுற்றிப் பார்க்கவே எங்க தக்குப் பிற்பகல் முழுவதும் சரியாகிவிட்டது.

ஏராளமானவர்கள், ஆணும் பெண்ணும், பெரியவர்களும் சிறியவர்களும்-வயதில்-வந்து, கண்டு மகிழ்ந்து, அறிந்து, தெளிந்து செல்கிறார்கள். கால் கடுக்கும்போது ஆங்காங்கே, இளைப்பாறவும் நல்ல பெஞ்சுகள் அமைத்து இருக்கிறார்கள். இப்படியே பல ஊர்களில் பிரபுக்கள் மாளிகைகள் கலைக் கூடங்களாகி விட்டன.

இம்முறை இல்லையென்றால் மறுமுறை வெல்வது உறுதி. அன்றைக்குப் பயன்படக்கூடிய இம்மாடமாளிகைகளைப் பிற கட்டிடங்களைப் பாழாக்க வேண்டா. அப்போதைக்கப்போதே குறித்து வைத்து, பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற போக்கை அங்குக் கண்டோம். இப்போதைக்குத் தனக்கு ஆகாத பாலைக் கொட்டிக் கவிழ்க்கும் போக்கு இல்லை.

சிலரிடத்திலே முடங்கிக்கிடந்த பொருட்செல்வத்தை எல்லாருக்கும் பயன்படும்படி செய்ததைப் போல், சில மாளிகைகளுக்குள் மறைந்து கிடந்த கலைப்பொருட்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கச் செய்து விட்டது சோவியத் ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ரஷியர்கள்.

வரலாற்றுச் சிறப்புடைய லெனின்கிராடை இரண்டாவது உலகப்போரின் போது, ஜெர்மானியர் முற்றுகை இட்டனர். முற்றுகை சில நாட்களா ? இல்லை. சில மாதங்களா ? இல்லை. மொத்தம் 900 நாள்கள் முற்றுகையாம். ஜெர்மானியர் சுற்றி வளைத்துக்கொண்டால் போர் விளையாட்டாகவா இருக்கும் ? மிகக் கடும்போர் நடத்ததாம். அன்றாடம் ஆயிரக்கணக்கில் சாவாம். உண்ண உண