பக்கம்:அங்கும் இங்கும்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
61
 


தமிழ்நாட்டின் அரைத்த மாவுப் பேச்சாளர்கள் சிலர், பகலுணவுத் திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு, 'பஞ்சர்' செய்ய முயன்றபோது, அவன் எனக்குக் கொடுத்த ஊக்க ஒலி அது.

இன்னும் தமிழ்நாட்டில் எங்கெங்கோ பாய்ந்தது. என் சிந்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகளையும், ஆள்களையும் பிடித்து, விட்டுத்தாவி, மீண்டும் 'யால்டா' வர நெடுநேரமாகிவிட்டது. இதற்குள் படகு திரும்பி வந்து துறையில் நின்றது. வழிகாட்டி ஆண்மகன்-படகிலிருந்து கரைக்குத் தாண்டிக் குதித்தார். நாங்கள் பத்திரமாக இறங்கி வந்தோம்.

அடுத்த நாள் காலை கடலில் குளிக்கத் திட்டமிட்டோம். எங்களோடு சேர்ந்து குளிக்கும்படி வேண்டினோம், வழி காட்டியை. தாம் வந்து எங்களைக் குளிக்க அழைத்துப் போவதாகவும், ஆனால் தாம் எங்களோடு குளிப்பதற்கு இல்லை என்றும் மறுத்தார். நாங்கள் இரண்டொரு முறை வற்புறுத்தினோம். உறுதியாக உணர்ச்சி ஏதும் காட்டாமல் மீண்டும் மீண்டும் மறுத்தார்.

அடுத்த நாள் கலை கடல் நீராட , எங்களை அழைத்துப் போக வந்தார் வழிகாட்டி. அவரை எங்களோடு சேர்ந்து நீராடும்படி மீண்டும் வேண்டினோம். அப்போது கூறின பதில் எங்களைத் திடுக்கிடச் செய்தது. நம்ப முடியவில்லை அச்செய்தியை ஏன் ? அப்போதும் சரி, அதற்கு முன்பும், துக்கத்தின் சாயலை அவரிடம் காணவில்லை. அச்சத்தின் நிழல் படரவில்லை அவர் அழகு முகத்தில்.

தமது கால்களில் ஒன்று பொய்க்கால், என்று அவர் கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியாவென்று வியந்தோம். சென்ற உலகப் போரில், ஈடுபட்டு, காலை இழந்துவிட்டதாக விளக்கம் கூறினார். பின்னர் பொய்க்கால் பெற்றார். அதனோடு வாழ்கிறார். அவரது நடையில் பொய்க்கால் நடையென்று சந்தேகப்படுவதற்கு இல்லாமல் சாமர்த்தியமாக