பக்கம்:அங்கும் இங்கும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64


இல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.

இதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை! எத்தனை கவனம் !

அடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.

“மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணையற்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.

இவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.

“ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று