பக்கம்:அங்கும் இங்கும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பதிப்புரை

திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். சிறந்த கல்வி அதிகாரியான அன்னார், சோவியத்து ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும். அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டுகின்றார். மேலும் சோவியத் மக்களுக்கு அந்நாட்டில் எவ்வாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது; விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வியை எவ்வாறு சாதாரண மக்களும் பயின்று பட்டம் பெற்று முன்னேற முடிகிறது ; உலகின் பெரும் நூலகங்களுள் ஒன்றான லெனின் நூலகத்தின் நடைமுறைச் சிறப்புகள் எவ்வாறு வியத்தகு முறையில் அமைந்துள்ளன என்பன போன்ற விவரங்களை இந்நூலில் ஆசிரியர் தமக்கே உரிய தமிழ் தடையில் விவரித்துள்ளார். தமிழில், பயண நூல் வரிசையோடு இடம் பெறக் கூடிய இந்நூலை வெளியிட அனுமதியளித்த ஆசிரியர்க்கு எமது நன்றி உரியது.


-பதிப்பகத்தார்.