பக்கம்:அங்கும் இங்கும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. ஊக்கும் கல்வி

முதியோர் கல்வி நிலையத் தலைவர் ; மாணவ,மாணவியருடன் பழகும் இனிமையைக் கண்டு மகிழ்ந்தேன். முதியோர் கல்வி பற்றிப் பொதுப்படையாகச் சில மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன்.

முதியோர் கல்வி-தொடர் கல்வி-நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருவதை அறிந்தேன். பல நூறாயிரவர் அதில் ஈடுபட்டு அதனால் பலன் அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். முதியோர் கல்வி ஈடுபாட்டில், ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவர்கள் அல்லர் என்று தெரிந்து இரசித்தேன்.

இக் கல்விக்கூடங்களை (தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும்) உள்ளாட்சிக் கல்வி மன்றங்கள் நடத்துகின்றனவாம்.

முதியோர் வகுப்புகளைக் காண விரும்பினேன். முதல்வரே, என்னை அழைத்துச் சென்றார். அங்கு நடந்து கொண்டிருந்த வகுப்புகள் நூற்றுக்கு மேல், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதுபோல், இரண்டொரு குப்புகளுக்குள் நுழைந்து இருந்து கவனித்தேன், அவற்றிலே ஒன்று. இக்காலத்துக்கு வேண்டிய போட்டோ பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வகுப்பு.