பக்கம்:அங்கும் இங்கும்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
 


"என்ன ? கல்வியில் இது எப்படிச் சேரும் ? என்னும் எழுத்துமல்லவா கல்வி" என்று மிரளாதீர்கள்.

ஆத்திசூடியும், கொன்றைவேத்தனும், நாலடியாரும், சுந்தர காண்டமும், வழக்குரை காதையுமே கல்வி என்ற மயக்கப்பட்ட நமக்கு, இது புதுமையாகவே தோன்றும்.

'ஆயகலைகள் அறுபத்து நான்கு' என்னும் வழக்கினை ஆழ்ந்து சிந்தித்தால், மொழிப் பாடங்களுக்கு அப்பாலும் கல்வி விரிவதை உணரலாம். கணக்கோடு, கல்விக் கணக்கு முடிந்துவிடவில்லை என்பதை அறியலாம்.

'அத்தனையும் கல்வியே. ஆகவே எத்தனைப் பாடங்களை, 'பயிற்சிகளை திணிக்க முடியுமோ அத்தனையையும் திணித்து விடுவோம் பள்ளியிறுதிக்குள்' என்ற போக்கு தீங்கானது.

வாழ்வு முழுவதற்குமான கலைகள் பலவற்றையும் பள்ளிப் பருவத்திலேயே புகுத்தி விடாலாமென்ற போக்கு அறிவு அஜீரணத்தையே விளைவிக்கும். அடிப்படைக் கலைகள் சிலவற்றில் ஆழ்ந்த அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதே பள்ளிக்கூடங்களின் வேலை. விரும்பும் தேவைப்படுகிற சில பல கலைகளைப் பின்னர் வீட்டிலோ ,தொழிற்கூடங்களிலோ, கழகங்களிலோ, முதியோர் கல்வி கூடங்களிலோ பெறவேண்டும். அதற்கு வாய்ப்புகள் அமைத்து வைக்க வேண்டும். இத்தெளிவு பரவினால் கல்விச் சிக்கல்களில் பல தீர்ந்துவிடும்.

சிக்கல்களை விட்டு, நிழற்பட வகுப்பிற்குப் போவவோம். நான் எதைக் கண்டேன் ? அவ் வகுப்பில் இருந்தவர்கள் கற்றுக் குட்டிகள். முந்திய வகுப்பில் கொடுத்த வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வந்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரும் தாங்களே சில 'போட்டோ'க்களை எடுத்துவந்