பக்கம்:அங்கும் இங்கும்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
 


அப் படம். நம் வகுப்பில் காட்டப்பட்டு மதிப்பிடப்பட்டிருந்தால்,

" எவன் சார் இதை எடுத்தான்?”

" இவனுக்கு சுட்டுப் போட்டாலும் இக்கலை வராது."

'ஆனைப் பார்க்காமல், தோளைப் பார்க்கிறது நோக்கு'

'அமாவாசையிலே எடுத்த படமா ஐயா' இது?

இப்படிப் பிய்த்துத் தள்ளியிருப்பார்கள், நம் அறிவாளிகள், 'பிய்த்து எடுத்தே' பிழைக்கிற கூட்டம் நாம், இல்லாத வற்றை மட்டுமே பட்டியல் போட்டு, பறைசற்றி, சோர்ந்து போகிற கூட்டம் நாம்.

என்ன செய்ய வேண்டும் ; எப்படிச் செய்ய வேண்டும்; எதை அதிகப்படுத்த வேண்டும்; ; எதை விரைவுபடுத்த வேண்டும்; எதை மெல்லச் செலுத்த வேண்டும் என்று ஆக்க வழியிலே, உள்ளது சிறக்க, சொல்லிப் பழகாத மக்கள் நாம். எனவே சாண் ஏறினால் முழம் சறுக்கி ஒப்பாரி வைத்தோ காட்டுக் கத்தல் கத்தியோ, ஒயும் மக்கள் நாம்.

இங்கிலாந்து கல்விக்கூடங்களில் கண்டமுறை, ஊக்கு வழி, வளர்க்கும் வழி நம் பள்ளிகளுக்கும் வத்திடாதோ ? இந்த ஏக்கத்தோடு அவ் வகுப்பை விட்டு வெளியேறினேன். அச்சிந்தனை இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

கற்க வந்தோமா, கல்லெறிய வந்தோமா என்பதே தெரியாத நிலையில் தம்பிகளை வைத்திருக்கிறோம். தொழில் திறமையைப் பற்றிச் சிந்திப்பதைவிடத் தகுதி என்கிற பொய்மான் வேட்டையிலே விரைகிறது ஆசிரியர் சமுதாயம்.

பெற்றோரோ, பிள்ளையைச் சீராக்குவதைத் தவிர மற்றெல்லா முயற்சிகளிலும் முனைந்து நிற்கின்றனர், சீராக்கக் கூட உரிமையுண்டா என்பதே வழக்கு இனியென்ன குறை?