பக்கம்:அங்கும் இங்கும்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
78
 "அப்ப்டியா? நீறுபூத்த நெருப்புப் போன்றிருந்த உங்கள் திறமையைப் போற்றுவதா ? தள்ளாத வயதிலும் புதுப்புதுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் உங்கள் ஊக்கத்தைப் போற்றுவதா? முழு மூச்சு ஈடுபாட்டைப் போற்றுவதா? என்று தெரியாது திகைக்கிறேன். தொடர்ந்து வெல்க நீவிர், மன்னிக்க வேண்டும். உங்கள் வயதை அறிந்து கொள்ளலாமே?" என்று இழுத்தேன்.

"அதற்கென்ன? என் வயது எழுபத்தாறு " என்று கணீரென்று உரைத்தார். ஓவியக்காரத் தாத்தா.

"நீவிர் நூறாண்டு வாழ்க" என்றேன், போகலாமென்று சாடை காட்டினேன் முதல்வருக்கு.

"இரண்டே விநாடி ; சிறு-செய்தி. ஒவியப் போட்டியில் முதற் பரிசு பெற்ற இவரும் நெசவுப் போட்டிலில் முதற் பரிச பெற்ற அந்த அம்மாளும் கணவன் மனைவி' இதை, முதல்வர் கூறி முடிப்பதற்குள், வகுப்பிலிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். முதல்வர் தொடர்ந்தார் பேச்சை. இருவரு இளைய மாணவர்கள். இவர்கள் சேர்ந்து ஈராண்டு ஆகவில்லை. இருவரும், பரிசு பெற்ற இரு பொருட்களையும் தங்களுக்ககன்று வைத்துக் கொள்ளாமல், இக் கலைகளை: கற்றுக் கொடுத்த கல்லூரிக்கே அன்பளிப்பாக்கிவிட்டனர்! இக்கொடையே இவர்கள் சிறப்புக்கெல்லாம் சிகரம்"- இதை முதல்வர், சொல்லி முடித்தது தான் தாமதம், நீண்ட பலமான கைதட்டல் வகுப்பிலே. சில விநாடிகளுக்கு முன் நிகழ்ந்ததைவிட பலமான கைதட்டல்.

மாணவத் தம்பதிகளின் ஆர்வமும் முயற்சியும் ஒரு பக்கம் பரவசப்படுத்தின சிறப்பைப் போற்றும் சக மாணவர்களின் சிறப்பு ஒரு பக்கம் பரவசப்படுத்திற்று. அரும்பொருளையும் பொதுப் பொருளாக்கும் நல்லியல்பு மற்றொரு பக்கமிருந்