பக்கம்:அங்கும் இங்கும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

துடிக்கும் ஆவலைத் தெரிவித்தனர். அவ்விளைஞர்கள், மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டார் ; அவர், அவர் களுக்கு ஒதுக்கிய பணி, படிப்பு ; வேறு பொறுப்புகள் அல்ல.

பிற பொறுப்புகளுக்குத் தேவைக்குமேல் ஆட்கள் கிடைத்துவிட்டதாலா ? இல்லையென்று கேள்விப்பட்டோம். பின் என்ன காரணத்தால் ?

லெனின் சிந்தித்தது இரஷ்யாவின் உடனடி எதிர்காலத்தைப் பற்றி மட்டுமல்ல; திட்டமிட்டதும் உடனடித்தேவைக்கு மட்டுமல்ல நீண்ட எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்தார். நீண்ட எதிர்கால வளர்ச்சிக்கும் என்னென்ன தேவை என்று சிந்தித்தார், தெரிவித்தார்.

‘நவீன கல்வியே இரஷிய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் வளத்திற்கும் துணை செய்யும். அக் கல்வி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக, ஆழமாகப் பரவுகிறதோ, அவ்வளவிற்கே, இரஷிசியாவின் எதிர்காலம் நன்றாக இருக்கும் : உறுதியாக இருக்கும். எத்தகைய நிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும்’ என்று உணர்ந்தார்.

‘மாணவர்களை அப்போதைய கிளர்ச்சிக்கு இழுத்து சிட்டுவிட்டால். புதிய இரஷியாவை, பொதுவுடைமை இரஷியாவை உருவாக்குவதற்கு வேண்டிய அறிவாளிகள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள் பொறுப்பேற்கும், ஆற்றல் உடையவர்கள் ஆகியோருக்குப் பஞ்சம் ஏற்பட்டு விடும். அப்பஞ்சம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும’ என்று தெரிந்து மாணவர்களைக் கிளர்ச்சிக்காரர்களாக்காமல், ஆயத்தக்காரர்களாக இயங்கச் செய்தார்.

இப்படி அவர் நல்வழியில் நடத்தியதால், அதைப் பின்பற்றி எங்கள் மாணவ சமுதாயம் கற்கும் சமுதாயமாகவே இருந்து வருகிறது. கற்றது போதாது; மேலும் மேலும் கற்க வேண்டும் ; கற்றதைப் பயன்படுத்த வேண்டும் ; சமூக