பக்கம்:அங்கும் இங்கும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
 

நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு, பெருநடை போட்டு வருகிறது . எங்கள் இளைய தலைமுறை யினரைப் பற்றி நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று சோவியத் கல்வியாளர்கள் கூறக் கேட்டோம்.

மாணவர்களை விதைநெல் போன்று கட்டிக் காத்த பெருத் தலைவரைப் பற்றி அவர்கள் பெருமை கொள்வதில் வியப்பில்லை. ஆனால் அவர் காட்டிய அறிவு வழியை, ஆக்க வழியை, பத்திய வழியை அவருக்குப் பின்னரும், பல்லாண்டு களாக, நாடு முழுவதும், கோடானுகோடி மக்களும், தொடர்ந்து பின்பற்றி வருவது எங்களுக்குப் பெரும் வியப்பாக, இருந்தது.

“என்னே ! உங்களுக்குத் தலைவரிடம் உள்ள பற்று” என்று பாராட்டினோம்.

“வாழ்வளித்த பெரியவருக்கு தாங்கள் செய்யக் கூடியது. வேறு என்ன இருக்கிறது ? தம் நன்மைக்காகப் பெருமைக்காக அல்லாது, மக்களின் நீண்ட எதிர்காலத்திற்காக, நாட்டின் நிலையான நல்வாழ்விற்காக வழிகாட்டினால், அதைக்கூடப் பின் பற்ற முடியாத மக்கள் இருந்தென்ன; போயென்ன ?” என்று பரவசத்தோடு ஒருவர் விளக்கக் கேட்டோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டோம். போற்ற மட்டும் கற்றுக்கொண்டு, பின்பற்றுவதற்கு வேண்டிய ஊக்கமும் உள் வலியும் அற்றுக் கிடக்கும் நம்மை எண்ணி நாணியதை அவர் புரிந்து கொண்டாரோ என்னவோ !

“இளைஞர் சமுதாயம், மாணவர் சமுதாயம், பொதுச் சமுதாயத்தின் ஒரு பகுதி ; சிறு பகுதியும் கூட. சமுதாயம் முழுவதும், கல்வியின் தேவையையும், அருமையையும்