உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அங்கும் இங்கும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. விஞ்ஞான விவசாயம்

நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் "புதிய ருஷியா" என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது."குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்
றுலகறியக் கூறி விட்டார் ;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போ
தடிமையில்லை அறிக என்றார்;"

என்னும் அடிகள் எப்போதும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. பின்னர், லெனின் எழுதிய நூல்களைக் கற்றபோது, என்றைக்காவது ஒரு நாள், அடிமைத்தளைகளை அறித்தெறிந்து, புரட்சி நடைபோடும், சோவியத் ஒன்றியத்தைக் காண வேண்டுமென்னும் அவா பிறந்தது. 1961 ஆம் ஆண்டின் இந்திய-சோவியத் கலாசார பரிமாற்றத்திட்டம், என் அவா நிறைவேற வழி வகுத்தது.

1961 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் சோவியத் ஒன்றியம் செல்லும் பேறு பெற்றேன். சோவியத் ஒன்றியத்தில் நான் பார்த்த முதல் நகரம் தாஷ்கண்ட். உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகராகிய இந்நகரையும் இதைச் சுற்றி
அ. இ –1