பக்கம்:அங்கும் இங்கும்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.14. படி, படி, படி!

படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை ; வெறும் புகழ்ச்சி யில்லை. அப்படியா என்று மலைக்க வேண்டா. இதோ அற்புதமான சான்று.

“எங்கள் மக்களில் மூன்றில் ஒருவர் ஏதாவதொரு கல்வி முறையில் சேர்ந்து கல்வி பெற்று வருகிறார்கள். இக் கூற்றினைக் கேட்டேன் : அடுத்தடுத்துக் கேட்டேன் ; நான்கு வாரங்கள் கேட்டேன். பெருமிதத்தோடு கூறக் கேட்டேன். வெற்றியொளி வீச, மகிழ்ச்சியோடு கூறினர், யாரோ வழிப்போக்கர், காற்று வாக்கிலே கூறவில்லை. விவர மறிந்தோர், பொறுப்புடையோர், ஈடுபாடுடையோர் கூறினர். புள்ளி விவரத்தோடு கூறினர். புள்ளி விவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘எங்கள் நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 23 கோடியை நெருங்குகிறது. இந்த இருபத்து மூன்று கோடி பேர்களில் ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்கள் இன்று கல்வி கற்று வருகிறார்கள்.’ இவை நான் கேட்ட புள்ளி விவரங்கள். இவை நம் நாட்டுப் புள்ளி விவரங்கள் அல்ல