பக்கம்:அங்கும் இங்கும்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
 


“ ‘பள்ளி வயது’ என்று ஒன்று இல்லை. படிப்பிற்குத் கால வரம்பு கிடையாது. வாய்ப்பு வரம்பு உண்டு பல நாடு களில் ; அதுவும் இங்கு இல்லை ஊக்க வரம்பு உண்டு, பல சமுதாயங்களில்; அதையும் இங்குக் காண முடியாது. இங்குக் கல்வித் தாகம் தணியாத் தாகம். பாடம் ஏற, பரீட்சையில் தேறத் தேற, சான்றிதழ் பெறப் பெற புதுப் புதுக் கல்வியினைக் கற்பதையே காண்பீர்கள். கற்போர் ஏழு கோடி எழுபது இலட்சத்தில் சிறுவர் சிறுமியர் உண்டு : இளைஞர் உண்டு : காளையரும் கன்னியரும் உண்டு; தந்தையரும் தாயாரும் உண்டு...”

விளக்கம் முடிவதற்குள், குறுக்கு வினாக்கள் எழுந்தன. என்ன வினாக்கள் ?

“உங்கள் நாட்டில், எல்லா வயதினரும் கல்வி கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாலிபர்கள் மட்டு மன்றி முதியோரும் கல்வி பெறுகிறார்கள் என்பதை விளக்குகிறீர்கள், நல்லது. இத்தொடர் கல்வி ஈடுபாடு, தொழிலாளர்களிடையே உண்டா ? நகர்ப்புறத் தொழிலாளர்களிடை மட்டுமா ? நாட்டுப்புறத் தொழிலாளர்களிடையிலுமா? ஆலைத் தொழிலாளர்களைப் போல் பண்ணைத் தொழிலாளர் களும் தொடர்கல்வி பெறுகிறார்களா ? கல்வியில் தொடர் வளர்ச்சி ஆண்களோடு நின்று விடுகிறதா ? பெண்களுக்கும் உண்டா ? இவ்வினாக்களுக்கு விடை இதோ :

“முன்பு சொத்தைப் போல் , கல்வியும், ஒரு சிலருடைய தனி உடைமையாக இருந்தது. ஜார் காலத்தில் கல்வி பொது மக்களுக்கு எட்டாததாக இருந்தது. எழுதப் படிக்க கூடத் தெரியாதவர்களே ஜாரின் குடிகளிலே நூற்றுக் எழுபத்து நான்கு பேர். சோவியத் மக்களின் நிலை அடியோடு மாறி விட்டது. ஐம்பது வயதிற்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் எழுத்தறிவு பெற்றனர் ; அதோடு நின்று விடவில்லை, எங்கள் கல்வி வளர்ச்சி. எழுத்தறிவு பெற்றவர்கள் நான்காவது வகுப்பு நிலையை எட்டிப் பிடித்தனர். அடுத்து